வசதி குறைந்த தமிழ்ப் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளும் உடனடியாக சீரமைக்கப்படும்! டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

மிகவும் மோசமான நிலையில் இருக்கும் தமிழ் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளும் உடனடியாக சீரமைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பழுதடைந்த நிலையில் இருக்கக்கூடிய கழிப்பறைகள் இடிந்து விழுந்த நிலையில் உள்ள கூறைகள் அனைத்தும் சீரமைக்கப்படும் என்று அவர் சொன்னார்.

தமது தலைமையிலான அரசாங்கம் அனைத்து இனங்களையும் அரவணைத்து செல்லும் என்று அவர் சொன்னார்.

நேற்று நீலாய் நகரில் நடைபெற்ற மாபெரும் நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக், துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, நீலாய் சட்டமன்ற உறுப்பினர் அருள் குமார், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நெகிரி செம்பிலான் துணை சபாநாயகர் டத்தோ ரவி உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles