


சிலாங்கூர் மாநில சட்டமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டது.
மிக விரைவில் சிலாங்கூர் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னணிட்டு நேற்று ஷா ஆலமில் சிலாங்கூர் மாநில தேர்தல் இயந்திரத்தை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி தொடக்கி வைத்தார்.
டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஜசெக துணை தலைவர் கோபிந்த் சிங் டியோ, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், உலுசிலாங்கூர் கெஅடிலான் தொகுதி தலைவர் டாக்டர் சத்யா பிரகாஷ் நடராஜன், மண்டிப் சிங் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் 56 சட்டமன்ற தொகுதிகளில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி நம்பிக்கை தெரிவித்தார்.

