தைப்பிங்கில் உள்ள ஆலயங்கள், பள்ளிகளுக்கு 2 லட்சத்து 36,500 வெள்ளி மானியம்

பேராக் மாநிலத்தில்
லாருட் மாத்தாங் செலாமா, கிரியான் மற்றும் உலு பேரா மாவட்டங்களைச் சேர்ந்த 23 கோவில்கள் மற்றும் தமிழ்ப் பள்ளிகளுக்கு மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 500 வெள்ளி மானியத்திற்கான நிதியை பேரா மாநில அரசாங்கம் வழங்கியது.

இதில் 16 தமிழ்ப் பள்ளிகளுக்கு 1 லட்சத்து 51,500 வெள்ளியும் ஐந்து இந்து ஆலயங்களுக்கு 67,000 வெள்ளியும் மற்றும் இரு அரசு சாரா இயக்கங்களுக்கு 18,000 வெள்ளி மானியம் வழங்கப்பட்டது..

  நேற்று இங்கு நடைபெற்ற மானியம் வழங்கும் நிகழ்வில் பேரா மாநில இந்திய சமூக விவகார , மனித வளம், சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன்  மானியங்களை எடுத்து வழங்கி பாராட்டினார்.


   சுமார் இரு மாதங்களுக்கு முன்பு இங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் இந்திய சமூக அமைப்புகளின் பொறுப்பாளர்களிடமிருந்து நேரடியாக பெறப்பட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான

மானியங்களை கடந்த மாதம் அவர்களின் வங்கி கணக்கில் சேர்ப்பிக்கப்பட்டுவிட்டதாக சுங்கை சட்டமன்ற உறுப்பினருபான சிவநேசன் கூறினார்.

   இந்நிகழ்வில் அவுலோங், பொக்கோ அசாம் சட்டமன்ற உறுப்பினர்கள், தைப்பிங் செலாமா கவுன்சிலர்கள் ஆகியோர்களும் கலந்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles