

ஷா ஆலம் ஜூன் 26-
நாட்டின் மனிதவள மேம்பாட்டிற்கு உதவும் வகையில் மலேசியர்கள் தீவேட் போன்ற தொழில் திறன் கல்வி பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேசமயம் திறன் வாய்ந்த திறமையான தொழிலாளர்களை உருவாக்க முதலாளிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசியாவில் உற்பத்தி மற்றும் சேவைத் துறையில் முதலீடுகள் சிறப்பாக உள்ளது.
இதற்கு ஏற்ப நாம் திறமையான தொழில் திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று அவர் சொன்னார்.
இன்று ஷா ஆலமில் Talent Corp மற்றும் சிலாங்கூர் மாநில மனிதவள மேம்பாட்டு கழகம் ஏற்பாட்டில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதழை மனிதவள அமைச்சர் சிவகுமார் வழங்கி பாராட்டினார்.
இந்த விழாவில் தொடர்ந்து பேசிய அவர்,
வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் நாடு 35 விழுக்காடு திறமையான தொழிலாளர்களை உருவாக்க இலக்கு வைத்துள்ளது என்றார்.
தொழில் துறைகளுக்கு தேவையான அளவு தொழிலாளர்களை நாம் கொண்டிருப்பது மிகவும் அவசியம்.
மேலும் இப்போது மலேசியா மிகவும் திறமையான தொழிலாளர் சக்தியாக மாறி வருகிறது.
சர்வதேச அரங்கில் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்.
அதற்கு தரமானமான மற்றும் திறமையான பணியாளர்கள் இருக்க வேண்டும் என்றார்.

