TVET தொழில் கல்வியை பயின்று சிறப்பான எதிர்காலத்தை அமைத்து கொள்ளுங்கள்! மனிதவள அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

ஷா ஆலம் ஜூன் 26-
தீவேட் தொழில் திறன் கல்வியை இரண்டாம் தர கல்வியாக கருதாமல் மாணவர்கள் தங்களின் எதிர்காலம் கருதி தீவேட் கல்வியை பயில முன் வர வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மையில் வெளியான எஸ்.பி.எம்.தேர்வில் தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தங்களுக்குரிய தொழில் திறன் கல்வியை தேர்வு செய்து கொள்ளலாம்.

உலகம் இன்று தொழில்நுட்பத்தை நோக்கி அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

மலேசியர்கள் தொழில் நுட்பத்தை வளர்ந்து கொள்ள தொழில் திறன் கல்வியை பயில வேண்டும்.

மனிதவள அமைச்சு உட்பட 12 அமைச்சுகள் TVET எனப்படும் தொழில் திறன் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

TVET எனப்படும் தொழில் திறன் பயிற்சிகள் மூலம் மாணவர்கள் சிறந்த ஒரு எதிர்காலம் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.

ஆகவே காலம் தாழ்த்தாமல் மாணவர்கள் தங்களுக்குரிய துறைகளை தேர்வு செய்து கல்வியை தொடரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles