ஒற்றுமை அரசாங்கத்திற்கு இந்தியர்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள்! மனிதவள அமைச்சர் சிவகுமார் நம்பிக்கை

ஷா ஆலம் ஜூன் 26-
விரைவில் நடைபெறவிருக்கும் ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்திய சமுதாயம் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு பிளவுபடாத ஆதரவை வழங்குவார்கள் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று அறிவித்தார்.

கடந்த பொதுத் தேர்தலில் இந்தியர்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு முழு ஆதரவு வழங்கினர்.

இதன் மூலம் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் அமைக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கத்தில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி இடம் பெற்றுது.

இப்போது ஒற்றுமை அரசாங்கம் சிறந்த முறையில் நாட்டை வழிநடத்தி வருகிறது.
மக்களும் சுபீட்சமாக வாழ்ந்து வருகின்றனர்.

வருங்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் ஒரு நல்ல அரசாங்கம் தேவை.

அந்த வகையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்கிறது.

விரைவில் நடைபெறவிருக்கும் ஆறு மாநில சட்டமன்றத் தேர்தல் மிகவும் சவாலாக அமைந்தாலும் இந்தியர்கள் ஒற்றுமை அரசாங்கத்திற்கு முழுமையாக ஆதரவை வழங்குவார்கள் என்று அவர் சொன்னார்.

இன்று ஷா ஆலமில் Telent Corp மற்றும் சிலாங்கூர் மாநில மனிதவள இலாகா ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் திறன் -தொழில்நுட்ப துறைகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதழை மனிதவள அமைச்சர் சிவகுமார் வழங்கி பாராட்டினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் மனிதவள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles