இந்த ஆண்டின் முதலாம் காலாண்டில் நான்கு லட்சம் அந்நிய தொழிலாளர்கள் நாட்டிற்குள் வந்துள்ளனர்

புத்ரா ஜெயா ஜூன் 27-
மலேசிய நிறுவனங்கள் சுமார் நான்கு லட்சம் வெளிநாட்டு ஊழியர்களை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இன்று தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 518,000 அந்நியத் தொழிலாளர்களைக் கொண்டு வருவதற்கான அரசாங்க இலக்கை விட இது குறைவாக இருந்தாலும் நான்கு லட்சம் பேர் நாடு வந்துள்ளனர்.

இங்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டவர்களில் 1,120 பேருக்கு வேலை கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

“ஒருபுறம் வெளிநாட்டு ஊழியர்களை எதிர்பார்க்கும் ஐந்து முக்கியமான பொருளாதாரத் துறைகள் உள்ளன.

மறுபுறம் பொறுப்பற்ற கூறுகளும் உள்ளன என்று உள்துறை அமைச்சு மற்றும் மனித வள அமைச்சு இடையேயான கூட்டுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

புத்ராஜெயா மேரியட் ஹோட்டல் இன்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் மற்றும் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் தலைமையில் அந்நியத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பில் முக்கிய சந்திப்பு கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles