TVET தொழில்நுட்பக் கல்வி இணைய முகப்பு வெளியீட்டு விழா துணைப் பிரதமர் தலைமையில் நடைபெற்றது

புத்ரா ஜெயா ஜூன் 27-
அரசாங்கத்திற்கும் தனியார் நிறுவனத்திற்கும் இடையே TVET
தொழில்நுட்பக் கல்வி மற்றும்
தேசிய தொழிற்கல்வி புரிந்துணர்வு ஒத்துழைப்பு PORTAL வெளியீட்டு விழா
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் இன்று நடைபெற்றது.

மனிதவள அமைச்சர் வ சிவகுமார், இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹென்னா இயோ உட்பட 12 அமைச்சர்கள் இன்று நடைபெற்ற தீவேட் கவுன்சில் கூட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.

TVET தலைவராக இருக்கும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறுகையில்
நாடு முழுவதும் 1,344 TVET நிறுவனங்கள் உள்ளன.

12 அமைச்சுகள் 668 TVET நிறுவனங்களைக் கொண்டுள்ளது
பல்வேறு துறைகளில் மொத்தம் 4,126 படிப்புகளை தீவேட் வழங்குகிறது.

TVET ஆட்சேர்ப்பு பிரிவை (UPT) நிறுவுவதற்கு துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் முன் மொழிந்தார்.

Unit Pengambilan TVET (UPT) செயல்படுத்துவது தொழில்துறையின் கோரிக்கைகளையும் இதன் மூலம் பூர்த்தி செய்ய முடியும்.

குறிப்பாக பெண்களுக்காக ஒரு TVET திட்டத்தை நிறுவி
அழகுசாதனப் பொருட்கள், பேக்கரி உட்பட இதர தொழில் துறைகளில் இவர்களை ஊக்குவிக்க முடியும்.

அதற்கான உரிய நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

TVET சுற்றுச்சூழலின் தொடர்ச்சியான முன்னேற்றம் உட்பட ஒட்டுமொத்தமாக
சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அமைச்சகத்திலும்
TVET திட்டப் பாடத்திட்டமும் மதிப்பாய்வு செய்யப்பட்டு காலப்போக்கில் மேம்படுத்தப்படும்.

அரசு சார்ந்த நிறுவனங்களுடன் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி
பரிமாற்றத்தில் மொத்தம் 16 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த ஒத்துழைப்பு
TVET திட்டத்தை செயல்படுத்துவதில் நேரடியாக ஈடுபட்டுள்ள தொழில்கள்
பாடத்திட்டம் மற்றும் பயிற்சிப் பொருட்களை உருவாக்குவதன் மூலம் நாடு தொழில் துறையில் முன்னேற்றம் காணும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles