நெகிரி செம்பிலான் மாநிலத்தில் குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கும் 13 தமிழ்ப்பள்ளிகள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்!

புத்ரா ஜெயா ஆக 18-
Kurang Murid Kritikal எனப்படும் மிகவும் குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கும் 13 தமிழ்ப் பள்ளிகள் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில்
இந்த பள்ளிகள் இடமாற்றம் செய்வதற்கு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் உதவி புரிய வேண்டும் என்று நெகிரி செம்பிலான் மாநில தமிழ்ப்பள்ளி உருமாற்ற ஒருங்கிணைப்பு பேரவை இன்று கோரிக்கை முன் வைத்தது.

நெகிரி செம்பிலான் மாநில தமிழ்ப்பள்ளி உருமாற்ற ஒருங்கிணைப்பு பேரவையின் தலைவர் டத்தோ ஆர்.கனகராஜா, துணை தலைவர் எம். காளிதாசன் ஆகியோர் தலைமையிலான பேராளர்கள் இன்று மரியாதை நிமித்தமாக மனிதவள அமைச்சர் சிவகுமாரை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மொத்தத்தில் 13 தமிழ்ப் பள்ளிகள் மிகக் குறைவான மாணவர்களை கொண்டிருக்கிறது.

அதாவது 30க்கும் குறைவானவர்கள்
மாணவர்கள் இந்த பள்ளிகளில் பயில்கின்றனர்.

மாணவர்கள் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இந்த பள்ளிகளை இடம் மாற்றம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் பேருதவி புரிய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இந்திய சமூகத்தின் தேவை மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு
தொடர்புடைய முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில்
Taman Rasah Jaya / Taman Thivy Jaya / Desa Rasah / Seremban 3 ,
Taman Harapan Baru, Taman Sri Putih / Taman Kasturi,
Taman Blossom Heights / Kg Tok Ungku,
Taman Guru / Taman Negeri / Taman Rasah
மேற்கண்ட குடியிருப்பு பகுதிகளில் புதிய தமிழ்ப் பள்ளிகளை இடம் மாற்றம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பேருந்து கட்டணத்தை ஈடுகட்ட முடியாத B40 பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் இதனால் பெரும் பயன் அடைவார்கள்.

இந்த பள்ளிகள் நகர்புறங்களில் இடமாற்றம் செய்வதன் மூலம் அதிக இந்திய மாணவர்களை ஈர்க்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles