சிரம்பான் ராசா ஜெயா – தீவி ஜெயாவில் புதிய தமிழ்ப்பள்ளி அமைவதற்கு அனுமதியை பெற்றுத் தாருங்கள்! அமைச்சர் சிவகுமாரிடம் மனு சமர்ப்பிப்பு

புத்ரா ஜெயா ஆக 18-
சுமார் 500க்கும் மேற்பட்ட இந்தியக் குடும்பங்கள் வாழ்ந்து வரும் சிரம்பான் ஜெயா – தீவி ஜெயாவில் புதிய தமிழ்ப்பள்ளி அமைவதற்கு அனுமதியை பெற்றுத் தரும்படி நெகிரி செம்பிலான் மாநில தமிழ்ப்பள்ளி உருமாற்ற ஒருங்கிணைப்பு பேரவை இன்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமாரை நேரில் சந்தித்து மனுவை வழங்கியது.

நெகிரி நெம்பிலான் மாநில தமிழ்ப்பள்ளி உருமாற்ற ஒருங்கிணைப்பு பேரவை (PERSATUAN AHLI-AHLI LEMBAGA PENGELOLA SEKOLAH SEKOLAH TAMIL NEGERI SEMBILAN) தலைவர் டத்தோ கனகராஜா, துணை தலைவர் காளிதாசன், உதவித் தலைவர் சுப்பிரமணியம், செயலாளர் நாகேன், துணை செயலாளர் நாகேந்திரன் ஆகியோர் இன்று மரியாதை நிமித்தமாக மனிதவள அமைச்சர் சிவகுமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகமான இந்தியர்கள் வாழும் சிரம்பான் ஜெயா – தீவி ஜெயாவில் தமிழ்ப்பள்ளி இல்லை.

இங்கு புதிய தமிழ்ப் பள்ளி அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலமாக
இந்திய சமூகத்தின் கோரிக்கையாக உள்ளது.

நெகிரி செம்பிலான் – மலாக்கா எல்லையில் புக்கிட் கெல்டிக் தமிழ்ப்பள்ளியில் இப்போது 17 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர்.

வருங்காலத்தில் இந்த பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் குறையலாம்.

ஆகவே, இந்த பள்ளியின் உரிமத்தை கொண்டு சிரம்பான் ஜெயா – தீவி ஜெயாவில் புதிய தமிழ்ப்பள்ளி கட்டப்பட வேண்டும்.

கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதியை பெற்றுத் தரும்படி அமைச்சர் சிவகுமாரை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

Koperasi Pekerja Jaya எனப்படும் ஜெயா தொழிலாளர் கூட்டுறவுக் கழகம்
திவி ஜெயாவில் 1.56 ஏக்கர் கூட்டுறவு நிலத்தை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலத்தில் புதிய தமிழ்ப்பள்ளியை கட்டலாம்.

இப்பள்ளி கட்டுவதற்கு எந்தவொரு நிதியும் தற்போது கிடையாது. கல்வி அமைச்சின் அனுமதி கிடைத்தால் அதற்கான நிதி திரட்டப்படும் எனும் கருத்து அமைச்சரிடம் முன் வைக்கப்பட்டது.

இதனிடையே,
சிரம்பான் ஜெயா – தீவி ஜெயாவில் புதிய தமிழ்ப்பள்ளியை கட்டுவதற்கு நெகிரி செம்பிலான் மாநில தமிழ்ப்பள்ளி உருமாற்ற ஒருங்கிணைப்பு பேரவையின் நடவடிக்கையை அமைச்சர் சிவகுமார் பெரிதும் வரவேற்றார்.

புக்கிட் கெளடேக் தோட்டப் பள்ளியின் உரிமத்தை புதிய தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு பெற்றுத் தருவது தொடர்பில் கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக்கை விரைவில் சந்திப்பேன் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

இது ஒரு நல்ல முயற்சி. இந்த முயற்சி வெற்றிபெற முழு ஆதரவு வழங்குவதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles