PERKESO டயாலிசிஸ் மையத்தின் முன்முயற்சி நோயாளிகளின் நிதிச்சுமையை எளிதாக்கும்! மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

புத்ரா ஜெயா ஆக 18-
SOCSO டயாலிசிஸ் மையத்தின் முன்முயற்சியை செயல்படுத்துவது குறித்து விவாதிக்க சுகாதார அமைச்சர் YB டாக்டர் ஜாலிஹா முஸ்தபாவுடன் நேற்று முக்கிய சந்திப்பை நடத்தியதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற ஒருமணி நேர சந்திப்பில் இது குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

SOCSO டயாலிசிஸ் மையத்தை நிறுவுவதன் மூலம், மனிதவள அமைச்சு SOCSO சார்ந்தவர்களுக்கான சேமிப்பை இலக்காகக் கொண்டுள்ளது

இது இறுதியில் பங்களிப்பாளர்களுக்கு பெரிதும் பயன் தரும் என்று அவர் சொன்னார்.

அதே நேரத்தில் நோயாளிகளின் நிதிச் சுமையை எளிதாக்கும்.
சிறுநீரக நோயாளிகளின் பெரும்பாலோர் B-40 பிரிவின் கீழ் உள்ளனர்.

சொக்சோ டயாலிசில் மையம் குறித்து விவாதிக்க
இடம் மற்றும் வாய்ப்பு வழங்கிய YB Dr Zaliha Mustafa அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் .

PERKESO டயாலிசிஸ் மையத்தின் முன்முயற்சியானது தொழிலாளர் வர்க்கத்தின் தலைவிதியைப் பாதுகாக்கும்

மேலும் இந்த முயற்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles