திருமுறைகளின் அருட்பெருமையை பறைசாற்றிய 48-ஆம் திருமுறை ஓதும் விழா!

காப்பார் ஜூன் 30-
கடந்த 21 ஜூன் 2026(ஞாயிற்றுக்கிழமை) தேசிய வகை வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளியில் மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவையின் 48-ஆவது. திருமுறை ஓதும் விழா எம்பெருமானின் ஆசியுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

காலையில் நால்வர் ஊர்வலம், சிறப்பு பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் இந்த திருமுறை விழாவை மலேசிய இந்து சங்க சிலாங்கூர் மாநில பேரவையின் முன்னாள் தலைவர் தொண்டர்மாமணி முனியாண்டி முத்தன் ஐயா அவர்களின் தலைமையில் மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநில பேரவையின் துணைத் தலைவி தொண்டர்மணி சரஸ்வதி வேலு, சிலாங்கூர் மாநில இந்து சங்க செயலாளர் தொண்டர்மணி முருகன் கிருஷ்ணமூர்த்தி, மாநில இந்து சங்க திருமுறை ஒருங்கிணைப்பாளர் தொண்டர்மணி சிவகுமார் அவர்களின் முன்னிலையில் குத்து விளக்கேற்றி மிக விமரிசையாக இந்த திருமுறை திறப்பு விழா கண்டது.

இரண்டாவது அங்கமாக பரிசளிப்பு நிகழ்வினை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கணபதிராவ் வீரமன் அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார்.

இந்த விழாவிற்கு மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநில பேரவையின் தலைவர் தொண்டர்மணி அசோகன் மூக்கன், கிள்ளான் அரசு மாநகர் மன்ற உறுப்பினர்கள், செமந்தா சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் பிரதிநிதியாக வருகை தந்த திரு. நோரிசான் ஹாஜி ஆமின், அரச மலேசியா வட கிள்ளான் மாவட்ட குற்றப் புலனாய்வு துறை காவல் அதிகாரி துவான் முகமது கைருல் அஸுவான், தொழில் அதிபர்கள் திரு நாதன் G, ஷங்கர் பிரதர்ஸ், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமையசிரியர் மன்றத்தலைவர் திரு. தமிழரசு ,தேசிய வகை வல்லம்புரோசா தோட்டத்தமிழ்ப்பள்ளி தலைமையைசிரியர் திருமதி உமாவதி நடராஜன், ஆலயத் தலைவர்கள், நடுவர்கள்,தேசிய வகை வல்லம்புரோசா தோட்டத்தமிழ்ப்பள்ளி , தேசிய வகை ஜாலான் ஆக்கோப் தமிழ்ப் பள்ளி,தேசிய வகை மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி, தேசிய வகை பிராப்ட்டன் தோட்ட தமிழ் பள்ளி, காப்பார் ஐயப்பன் ஆலயம்,கம்போங் பெரபாட் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம்,பத்து பெலா ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம், காப்பார் கூட்டு பிராத்தனை, செமந்தா செரா செரியா பாலர்ப்பள்ளி, காப்பார் சுற்று வட்டார தேசிய இடைநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் ஆகியவற்றை பிரதிநிதித்து சுமார் 360க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர் என்று வட்டார தலைவர் விவேகரத்னா அருள்நேசன் ஜெயபாலன் தெரிவித்தார்.

பெற்றோர்கள் திரளாகத் தங்கள் பிள்ளைகளுடன் வந்ததுடன் பல பெற்றோர்கள் தங்களால் இயன்ற உதவிகளையும் வழங்கியது மிகச் சிறப்பு.

மேலும் பெற்றோரின் முயற்சியால் வீட்டில் திருமுறை பயிற்சிகளை, மற்றும் சமய ஆசிரியர்களின் முறையாக மேற்கொண்டு சமய போதனைகளால் மாணவர்கள் போட்டியில் சிறந்த அடைவுகளைப் பெற பெரும் முயற்சி எடுத்தனர் என்று ஏற்பாட்டுக் குழு தலைவர் தொண்டர்மணி மோகன கிருஷ்ணன் மாரி தெரிவித்தார்.

வரும் 1 மற்றும் 2 ஆகஸ்டு மாதம் மஹ்சா பல்கலைக்கழகம், சௌஜானா புத்ராவில் (Mahsa Universiti, Saujana Putra), மாநில நிலையிலான போட்டியிலும் நம் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இத்திருமுறை விழா மிகச்சிறப்பாக வெற்றி பெறுவதற்கு நன்கொடையாகவோ, பொருள் உதவியாகவோ, உடல் உழைப்பாகவோ,ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப் பேரவையின் செயலவை உறுப்பினர்களின் சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles