


போர்ட் டிக்சன்,ஆக.20-
இந்த நாட்டில் உள்ள வங்கி தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்தும் வேளையில் அவர்களின் உரிமைகளுக்காக தேசிய வங்கி பணியாளர்கள் சங்கம் (NUBE) விளங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
வங்கி தொழிலாளர்களின் தலைவிதிக்காக போராடும் தொழிற்சங்கமாக தேசிய வங்கி பணியாளர்கள் சங்கம் விளங்க வேண்டும் என்பதே எனது கருத்து.
தேதிய வங்கி பணியாளர்களின் சங்கத்தின் தலைவர் Tan Eng Hong மற்றும் அதன் செயலாளர் J. Solomon, பொருளாளர் Chee yeah ceeu ஆகியோர் தலைமையில் இந்த தொழிற்சங்கம் சிறந்து விளங்குவது பாராட்டுக்குரியது.
தேசிய வங்கி ஊழியர் சங்கத்தின் (NUBE) அழைப்பின் பேரில் 25 ஆம் ஆண்டு விருந்து உபசரிப்பு விழாவில் கலந்துகொண்தை எண்ணி நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
NUBE இன் நிர்வாகத்தை வலுப்படுத்தும் மற்றும் வலுப்படுத்தும் முயற்சியில் NUBE உறுப்பினர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கு இந்த விழா தளமாக இருக்கிறது.
“நிதிச் சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சமூகப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்” என்ற தேசிய வங்கி பணியாளர்கள் தொழிற்சங்கத்தின் கருப்பொருள் மனித வள அமைச்சுக்கு மிகவும் நெருக்கமானது என்றார் அவர்.
இவ்வேளையில் NUBE மற்றும் புதிய தலைமை வலுவாக நின்று நாட்டில் உள்ள வங்கித் துறையில் உள்ள தொழிலாளர்களின் தலைவிதிக்காகப் போராடும் ஒரு சிறந்த தொழிற்சங்கமாக விளங்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தமது உரையில் குறிப்பிட்டார்.
போர்ட் டிக்சனில் நடைபெற்ற இந்த விழாவில் நாடு தழுவிய அளவில் தேசிய வங்கி பணியாளர்கள் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

