
போர்ட் டிக்சன், ஆக.20-
ஷா ஆலம் எல்மினா
அருகே கத்ரி நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சிறுரக விமான விபத்தில் உயிரிழந்த ஏழு குடும்பங்களின் வாரிசுகள் சமூகப் பாதுகாப்பு அமைப்பில் (Socso) இழப்பீடு பெற தகுதியுடையவர்கள் என்று மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சொக்சோவின் பாதுகாப்பு விதிகளின்படி விபத்தில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் தகுதி நிலையை சரிபார்த்து உடனடியாக செயல் நடவடிக்கை எடுக்குமாறு சொக்சோவுக்கு உத்தரவிட்டதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்கள் தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 (சட்டம் 4) இன் கீழ் தகுதிகளைக் கொண்டிருப்பதாகவும், மற்றொரு குடும்பம் சட்டம் 4 மற்றும் சுயவேலைவாய்ப்பு சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017 (சட்டம் 2017) ஆகியவற்றின் மூலம் இரண்டு தகுதிகளைக் கொண்டிருப்பதாகவும் மதிப்பாய்வின் முடிவு கண்டறிந்ததாக அமைச்சர் சிவக்குமார் கூறினார்.
“சமூக பாதுகாப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சவ அடக்கத்திற்கு RM2,000 (bayaran Faedah
Pengurusan Mayat ) வழங்கப்படுகிறது.
இந்த குடும்ப வாரிசுகள் காலமுறை ஓய்வூதியப் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள்” என்று அவர் தெரிவித்தார்.

