நெகிரி செம்பிலான் மாநில இந்தியர் சமூக நலனபிவிருத்தி சங்கத்திற்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் உதவிகரம்

புத்ரா ஜெயா ஆக 19-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மிகவும் துடிப்புடன் சமூக சேவைகளை ஆற்றி வரும் நெகிரி செம்பிலான் இந்தியர் சமூக நலனபிவிருத்தி சங்கத்திற்கு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று 5,000 வெள்ளியை வழங்கினார்.

ஏழு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியர் நலன் சார்ந்த சமூக நல திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து சேவையாற்றி வரும் இந்த சங்கம் மேலும் துடிப்புடன் செயல்பட இந்த நிதியுதவி பெரிதும் துணை புரியலாம் என்றார் அவர்.

நெகிரி செம்பிலான் மாநில இந்தியர் சமூக நல நலனபிருத்தி சங்கத்தின் தலைவர் கந்தசாமி அவர்கள் இன்று 5,000 வெள்ளிக்கான காசோலையை மனித வள அமைச்சர் சிவகுமாரிடம் இருந்து நேரடியாக காசோலையை பெற்றுக் கொண்டு இயக்கத்தின் சார்பில் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles