
கோலாலம்பூர் அக் 22-
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp எனப்படும் மனித வள மேம்பாட்டு கழகத்தின் விருந்தளிப்பு விழா வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தலைநகரில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
மதிப்புமிக்க மனிதவள மேம்பாட்டு விருதுகள் விருந்தளிப்பு விழாவுக்கு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தலைமையேற்கிறார்.
முன்மாதிரியான முதலாளிகள், பயிற்சி வழங்குநர்கள் மற்றும் பயிற்சியாளர்களை அங்கீகரித்து HRD Corp இந்த விருதுகளை வழங்குகிறது.
மதிப்புமிக்க மனிதவள மேம்பாட்டு விருதுகள் 2023-இன் வெற்றியாளர்களாக யார் என்பதை தெரிந்து கொள்ள தேசமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது.
இன்றும் ஒரு வாரத்தில் அனைத்திற்கும் விடை கிடைக்கும் என்கிறார் மனித வள அமைச்சர் வ சிவகுமார் அவர்கள்

