

கோலாலம்பூர் அக் 21-
மலேசிய – இந்திய நாடுகளுக்கு இடையிலான பிரத்தியேக
நட்புறவின் அடையாளமாக மலேசியாவுக்கு 170,000 மெட்ரிக் டன் பச்சரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
மலேசியா பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடைலான அணுக்கமான
ஒத்துழைப்பின் அடையாளமாக
இது விளங்குகிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
உள்நாட்டு உணவு உத்தரவாதத்தை
பாதுகாக்கும் நட்பு நாடுகளின் முயற்சிகளுக்கு இந்தியாவின்
தொடர்ச்சியான ஆதரவைப் புலப்படுத்தும் வகையிலும் இந்த அனுமதி
வழங்கப்படுவதாக கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் கூறியுள்ளதை பெரிதும் வரவேற்கிறேன்.
மலேசியாவுக்கு பச்சரிசியைப் பிரத்தியேகமாக வழங்க இந்தியா ஒப்புக்
கொண்ட தகவலை இந்தியா வெளியுறவு அமைச்சர் டாக்டர்
எஸ்.ஜெய்சங்கர்
தொலைபேசி வாயிலாக மலேசியா வெளியுறவு
அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ரி அப்துல் காடீரிடம் தெரிவித்ததாக தூதரகம் அறிக்கை மூலம் தெரியபடுத்தி இருக்கிறது.
இதற்கு பெரும் முயற்சியை எடுத்த வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் முகமட் சாபுவும் பாராட்டுக்குரியவர்.
விநியோகப் பற்றாக்குறை நிலவி வரும் நடப்புச் சூழலில் மலேசியர்களுக்கு
இந்திய அரசாங்கம் காட்டிய ஆதரவுக்கு தாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை காலத்தில் 170,000 மெட்ரிக் டன் பச்சரிசியை ஏற்றுமதி செய்ய இந்திய முன் வந்திருப்பதால் நாட்டில் அரசி பற்றாக்குறை நிலவாது என்று நம்புகிறேன் என்றார் அவர்.

