புக்கிட் காசிங் தொகுதியில் ஜூன் 21ஆம் திகதி ‘Meet Your ADUN’ நிகழ்வு ஏற்பாடு

ஷா ஆலம், ஜூன் 18 – புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதி மக்கள் தங்களின் பிரதிநிதியை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கான “Meet Your ADUN” எனும் சிறப்பு மக்கள் சந்திப்பு நிகழ்வு எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளது.

‘சன்ராஜ் கறி ஹவுஸ்’ (Sunraj Curry House) உணவகத்திற்கு எதிரே உள்ள ஜாலான் 5/57 மைதானத்தில் (Padang Jalan 5/57) இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் நேரடியாகத் தன்னிடம் பகிர்ந்துகொள்வதற்கும், தொகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்த அண்மைத் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கும் இந்நிகழ்வு ஒரு சிறந்த தளமாக அமையும் என்று புக்கிட் காசிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ் தெரிவித்தார்.

மேலும், இந்த நிகழ்வின் ஒரு சுவாரசியமான அங்கமாக, தந்தைர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு அங்கு வருகை தரும் தந்தையர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் ‘இலவச மசாஜ்’ (Urutan Percuma) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சேவை விரைவாக வருபவர்களுக்கு முன்னுரிமை (First come, first served) என்ற அடிப்படையில் வழங்கப்படும் என அவர் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, அதே இடத்தில் அன்றைய தினம் நண்பகல் 12 மணி வரை ‘மடாணி ரஹ்மா மலிவு விற்பனை’ (Jualan Rahmah MADANI) நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பல்வேறு அத்தியாவசியப் பொருட்களை மிகவும் மலிவான விலையில் வாங்கிப் பயன்பெறலாம்.

பொதுமக்கள் அனைவரும் தங்களின் குடும்ப உறுப்பினர்களுடன் வருகை தந்து இந்த நிகழ்வை மேலும் சிறப்பிக்க வேண்டும் ராஜீவ் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles