
காடேக், நவ 5-
மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள வேளையில் காடேக் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜெகன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
இவரை ஆதரித்து காடேக் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், டிக்கம் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
ஜசெக கட்சியைச் சேர்ந்த ஜெகன் மற்றும் ம இகா வேட்பாளர் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

