அரசுப் பணிகளில் இந்தியர்கள் அதிகம் பங்கேற்க வேண்டும்: டத்தோ அந்தோனி லோக் வேண்டுகோள்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர்: நவ 5-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து அமைச்சு தமிழ் ஊடக நண்பர்களுக்காக ஒரு நெருக்கமான, நட்புறவான இரவு விருந்தை ஏற்பாடு செய்தது உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

ஊடகங்களுடனான நல்ல பணியுறவை மேலும் வலுப்படுத்தவும், அனைவரும் அமைதியாகச் சந்தித்து உரையாடவும் இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

அமைச்சகத்தின் கீழ் பல துறைகளும் 20-க்கும் மேற்பட்ட முகமைகளும் செயல்படுவதால், ஊடகங்களுடன் அடிக்கடி எங்களுடன் தொடர்பு ஏற்படுகிறது.

அந்த உறவை அதிகாரபூர்வ நிகழ்வுகளுக்கு அப்பாலும் வளர்ப்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.

மேலும்
அரசுப் பணிகளில் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாகப் பங்கேற்க வேண்டும் என்றும், திறமை, கல்வி, ஆர்வத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தோனி லோக் வலியுறுத்தினார்.

இந்திய சமூகத்திற்கு முன்னுதாரணமாக டத்தோ ஸ்ரீ ஜனா சந்திரன் இருக்கிறார்.

இதற்கு உதாரணமாக, கடல்சார் துறையில் முனைவர் பட்டம் பெற்ற அதிகாரி, தகுந்த நிபுணத்துவப் பொறுப்பில் நியமிக்கப்பட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், RTM தமிழ் செய்தி வாசிப்பாளரும் செய்தி ஆசிரியருமான டாக்டர் சிவம் தமிழ்செல்வம், வரும் நவம்பர் 17 அன்று மலாயா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறவிருப்பதற்காக மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார் அமைச்சர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போக்குவரத்து துறைக்கான தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜனா சந்திரன் ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles