

கோலாலம்பூர் ஜூன் 18-
பெண்கள் மட்டுமே பங்கேற்கும் லீகா புத்ரி கிண்ண கால்பந்து போட்டி இப்போது கலை கட்டியிருக்கிறது.
பினாங்கு இந்தியன் எஃப்சி பெண்கள் அணி லிகா புத்ரி 2026 இறுதிப் போட்டிக்கான இடத்தைப் பெற போராடும் இந்த வரலாற்று தருணத்தில், அனைத்து கால்பந்து ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்களையும் அன்புடன் அழைக்கிறது என்று அதன் தலைவர் ஸ்ரீ சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பினாங்கு இந்தியன் எஃப்சி மற்றும ஃப்யூச்சர் FA அணிகள் இடையிலான ஆட்டம் வரும் 21 ஜூன் 2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:00 மணிக்கு ஸ்டேடியம் PKNS (B) நடைபெறுகிறது.

பல ஆண்டுகளாக கடின உழைப்பு, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் பலனாக, எங்கள் பெண்கள் அணி இப்போது இறுதிப்போட்டிக்கு இன்னும் ஒரு படி மட்டுமே தூரத்தில் உள்ளது.
உங்கள் ஆதரவும் உற்சாகமும் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.
பினாங்கு இந்தியன் எஃப்சி அணி வெற்றி பெற்று இறுதி ஆட்டத்திற்கு முன்னேற ரசிர்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவிக்கும் படி ஸ்ரீ சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

