இந்தியர்கள் மீது அதிக அக்கறை கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை ஆதரியுங்கள்! டத்தோ ராமா வேண்டுகோள்

சிரம்பான் ஜூலை 31-
நமது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் இந்திய சமுதாயத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்.

தமிழ்ப் பள்ளிகள் மற்றும் ஆலயங்களுக்கு மடானி அரசாங்கம் மூலம் அதிக நிதியை வழங்கி இருக்கிறார்.

நாட்டில் எட்டு புதிய மின் சுடலை அமைக்க நிதியுதவி ஒதுக்கி உள்ளார்.

இந்திய தொழில் முனைவோர் மற்றும் சிறு வியாபாரிகள் தங்கள் தொழிலை அதிகரிக்கும் வகையில் பல உதவிகளை வழங்கி இருக்கிறார்.

இந்நிலையில் நெகிரி செம்பிலான் மாநில இந்தியர்கள் தொடர்ந்து பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்கும்படி டத்தோ ராமா கேட்டுக் கொண்டார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய சமுதாயத்திற்கு உதவும் வகையில் பல நல்ல திட்டங்களை வகுத்து இருக்கிறார்.

அவர் தொடர்ந்து பிரதமராக நீடிக்க இந்தியர்கள் பக்கத்தான் ஹராப்பானுக்கு வாக்களிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles