

சிரம்பான் ஜூலை 31-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாக்காத்தான் ஹராப்பான் சார்பில் மம்பாவ் சட்டமன்ற தொகுதியில் லீ காய் யெட் போட்டியிடுகிறார்.
நாளை ஆகஸ்ட் 1 ஆம் தேதி வாக்களிப்பு தினமாகும்.
இந்நிலையில் மம்பாவ் முருகன் கோவிலுக்கு சிறப்பு வருகை தந்த லீ காய் யெட்டிற்கு கோவில் நிர்வாகம் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தது.
அவருடன் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் புகழ்பெற்ற ஜசெக உறுப்பினர் காளிதாசனும் வருகை தந்தார்.

