தாமான் கோத்தா செராஸ் முண்டககண்ணி அம்மன் ஆலயத் திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது! தொழில் அதிபர் ஜீவா அன்னதானம் வழங்கினார்

செராஸ், ஆக 1-
செராஸ் பத்தாவது மைல் தாமான் கோத்தா செராஸில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மூண்டகக்கண்ணி அம்மன் ஆலயத்தின் 37 ஆம் ஆண்டு வருடாந்திர திருவிழா இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

புற்று நாகத்துடன்
இந்த ஸ்ரீ மகா மூண்டகக்கண்ணி அம்மன் கடந்த 54 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது.

மேலும் பல இங்குள்ள குடியிருப்பாளர்கள் அம்பாளின் பல்வேறு வடிவங்களைக் கண்டு இன்று வரை பயபக்தியுடன் அம்மனை வழிபட்டு வருகின்றனர்

இப்போது இந்த ஆலயம் 15 லட்சம் வெள்ளி செலவில் கம்பீரமாக கட்டப்பட்டு வருவதாக ஆலயத் தலைவர் டத்தோ டாக்டர் கனகசுந்தரம் தெரிவித்தார்.

முதல் கட்டமாக ஆறு லட்சம் வெள்ளியில் ஆலயம் எழுதப்பட்டுள்ளது.

ஆலயம் சுற்றிலும் மதிசுவர் எழுப்புதல், மண்டபம், பளிங்கு கற்கள் பொருத்துதல் உட்பட திருப்பணி வேலைகள் அனைத்தையும் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

இதனிடையே இன்று காலையில் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்கள் பால்குடம் ஏந்தி அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர்.

பிற்பகலில் மகேஸ்வர பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் பரிமாறப்பட்டது.

தொடர்ந்து 10 ஆவது ஆண்டாக ஜீவா அவர்கள் அன்னதானத்தை ஏற்றுக் கொண்டார்.

ஆலய நிர்வாகத்தின் சார்பில் ஜீவா அவர்களுக்கு தலைவர் டத்தோ டாக்டர் கனகசுந்தரம் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இன்று நடைபெற்ற ஆலய திருவிழாவில் மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் , கவிமாறன், கிராமத் தலைவர் கிறிஸ்டி, பெர்ஜெயா குருப் கோப்ரெட் நிறுவனத்தின் துணை நிர்வாகி வோங் மிங் சி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஜீவா உட்பட முக்கிய பிரமுகர்களுக்கு ஆலய நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles