
நம்பிக்கை குழுமத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நம்பிக்கை வர்த்தக விருது விழாவில் நாட்டில் பெருவாரியாகஅறியப்படும் லோட்டஸ் குழுமத்தின் தலைவர் டான்ஶ்ரீ ரெனா துறைசிங்க்கதிற்க்கு வாழ்நாள் சாதனையாளர்விருது வழங்கப்பட்டது.
சினிமா, ஹோட்டல், உணவகம், ரிசோர்ட் என மெலும் பல வர்த்தகத்தில் பல ஆண்டுகளாக சிறந்தஇடத்தினை தக்கவைத்திருக்கும் லோட்டஸ் குழுமத்தையும் அதன் தலைவர் டான்ஶ்ரீ ரெனா துறைசிங்கம்அவரையும் கௌரவிக்கும் வகையில் நேற்று இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.
நேற்று தலைநகரில் நடைபெற்ற நம்பிக்கை வர்த்தக விருதில் டான்ஶ்ரீ ரெனா துறைசிங்கம் அவருக்குநம்பிக்கை குழுமத்தின் தலைவர் டத்தோஶ்ரீ இக்பால் இந்த வாழ்நாள் சாரனையாளர் விருதை எடுத்துவழஙினார்.

