நம்பிக்கை வர்த்தக விருதில் எஸ்.பி.கேர் குழுமத்திற்கு சிறந்த மருத்துவ சேவை விருது.

நம்பிக்கை குழுமத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நம்பிக்கை வர்த்தக விருது விழாவில் சிறந்த மருத்துவ சேவைக்கான விருதினை ரவாங் வட்டாரத்தின் புகழ்பெற்ற எஸ்.பி. கேர் குழுமத்திற்கு வழங்கப்பட்டது.

13 வருடங்களுக்கும் மேலாக மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவைகளும் வசதிகளும் வழங்கி வரும் இந்த எஸ்.பி. கேர் குழுமத்தை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி. கேர் குழுமத்தின் சார்பாக குழுமத்தின் இந்த விருதினை எஸ்.பி. கேர் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான டாக்டர் ஹெர்ரி தினேஷ் மகாலிங்கம் பெற்றுக் கொண்டார்.

எஸ்.பி. கேர் குழுமம் தொடங்கியது முதல் இன்று வரையிலும் தங்களது குழுமத்தில் இருக்கின்ற அனைவரின் அர்ப்பணிப்புகளும் பங்கேற்புகளும் மிகவும் அளப்பரியது. இந்த விருதினை பெற்றதற்கு எஸ்.பி. கேர் குழுமத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், தாதியர்கள், மேலவை அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியினை டாக்டர் ஹெர்ரி தெரிவித்து கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles