
கோலாலம்பூர் அக்டோபர் 26
நாட்டின் வர்த்தகத் துறையில் தங்களின் வியாபாரத்தையும் தொழிலையும் வெற்றிப் பாதையில் செலுத்திவரும் இந்திய தொழில் முனைவர்களை அங்கிகரிக்க நம்பிக்கை வர்த்தக விருது பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நாட்டில் வர்த்தகத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்திருக்கும் மூத்த தொழில்முனைகளுடன் சேர்ந்து வளர்ந்து வரும் தொழில்முனைவர்கள் அனைவரையும் அங்கிகரித்து கௌரவிக்கும் உயர்ந்த நோக்கில் நம்பிக்கை குழுமம் இந்த பிரமாண்ட விருது நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறது.
தலைநகர் ஜாலான் டிராவர்ஸில் அமைத்துள்ள டேவான் துன் ரசாக், பேங்க் ரக்யாட் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நம்பிக்கை வர்த்தக விருதில் சிறந்த 31 இந்திய தொழில்முனைவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விவசாயம், தொழில்நுட்பம், மருத்துவம், தங்க வியாபாரம், உணவு, உணவகம், டெக்ஸ்டைல், திருமணம், கலைகள், பதிப்பகம், ஏற்றுமதி என பல வர்த்தக துறையில் சாதனை புரிந்த தொழில்முனைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

சினிமா, ஹோட்டல், உணவகம், ரிசோர்ட் என பல வர்த்தகத்தில் பல ஆண்டுகளாக சிறந்த இடத்தினை தக்கவைத்திருக்கும் லோட்டஸ் குழுமத்தின் தலைவரான டான் ஶ்ரீ ரெனா துறைசிங்கம் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இவ்வாண்டு நம்பிக்கை குழுமத்தின் நம்பிக்கை வர்த்தக விருதினை வென்ற அனைத்து தொழில்முனைவர்களுக்கும் நம்பிக்கை குழுமத்தின் உரிமையாளர் டத்தோ ஶ்ரீ இக்பால் வாழ்த்துகளை தெரிவித்தார்.

