மித்ரா நிதி நிர்வாகத்தை கண்காணிக்க சிறப்பு நடவடிக்கை குழு- டத்தோ ரமணன்

மித்ரா சிறப்பு மாநியங்களைப் பெற்ற அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு தனது தலைமையில் சிறப்பு குழுவு அமைக்கப்படவுள்ளதாக
அதன் சிறப்பு நடவடிக்கை குழுத் தலைவர் டத்தோ ஆர். ரமணன் கூறினார்.

இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக இதுவரையில் 118 விண்ணப்பங்களுக்கு  நேரடியாக நிதியை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் கிடைக்கப்படாத நிதிகளை விரைவில் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படுமென அவர் உறுதியளித்தார்.

இதுவரையில் இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் அரசு சாரா அமைப்புகளின் நலனுக்காக 30 மில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதனை தொடர்ந்து சுமார் 2,373 விண்ணப்பம் பெறப்பட்டு அவற்றில்  353 பேர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இற்தியாக 183 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிதி ஒதுக்கீட்டு நடவடிக்கையில் எந்த ஒரு ஒழிவு மறைவும் இருக்கக்கூடாது எனும் நல்ல நோக்கத்தில் அனைத்தையும் வெளிப்படையாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் மித்ரா நிதியை பெறும் அமைப்புகளின் விவரங்களை மித்ரா அகப்பக்கத்தில் வெளியிடப்படும் என அவர் சொன்னார்.

மித்ராவின் நிதி நேரடியாக மக்களை சென்றடைவதற்கான நடவடிக்கைள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டத்தோ ரமணன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles