
கோலாலம்பூர் அக் 26-
பொழுது போய் பொழுது விடிந்ததும் என்னைப் பற்றி பொய் செய்திகளை எழுதுக் கொண்டிருக்கும் தரப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று எச்சரித்தார்.
தினசரி பொய் செய்திகளை எழுதி என்னை வீழ்த்தி விடலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
பொய் செய்தி எப்போதும் உண்மையாகி விடாது.
ஒருநாள் உண்மை வெல்லும்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும் இறுதியில் தர்மம் வெல்லும்.
அந்த வகையில் எனக்கு எதிராக பொய் செய்திகளை எழுதி கொண்டிருக்கும் தரப்புக்கு எதிராக இனியும் மெளனம் சாதிக்க மாட்டேன்.
நீதிமன்ற சட்ட நடவடிக்கை மூலம் அவர்களை நீதிமன்றத்தில் சந்திப்பேன்.
பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை மறந்து விட வேண்டாம்.
மனிதவள அமைச்சராக பதவி ஏற்றது முதல் இதுநாள் வரை குறிப்பிட்ட
தரப்பு என்னை தாக்கி பொய்யான செய்தியை வெளியிட்டு வருகிறது என்றார்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரே தீர்வு நீதிமன்ற சட்ட நடவடிக்கையே என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் எச்சரித்தார்.

