

கோலாலம்பூர் அக் 26-
பொய் செய்திகளினால் எவ்வித நன்மையும் இல்லை.
மக்கள் நன்மை அடையும் வகையில் உண்மை செய்திகளை எழுதி வெளியிடுங்கள் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் ஊடகவியலாளர்களை கேட்டுக் கொண்டார்.
பொய் செய்திகள் எப்போதும் நிலைத்திருக்காது. கண்டிப்பாக உண்மை வெளிச்சத்துக்கு வரும்.
பொய் செய்திகளால் சமுதாயத்திற்கு எந்தவொரு நன்மையும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் உண்மை செய்திகளை எழுதினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஜசெக கட்சி சார்பில் தமிழ் ஊடகவியலாளர் களுடன் தீபாவளி விருந்து உபசரிப்பு இன்று லேபோ அம்பாங் பேட்டல் உணவகத்தில் நடைபெற்றது.
இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனிதவள அமைச்சர் சிவகுமார் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.
ஜசெக கட்சி தலைவர்கள் மற்றும் எனக்கும் தமிழ்ப் பத்திரிகைகள் அதிக அளவில் செய்தியை வெளியிட்டு ஆதரவை வழங்கியுள்ளன.
இந்த தருணத்தில் தமிழ் பத்திரிகைகள் மற்றும் ஊடகவியல் களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார் அவர்.

