
லண்டன், மே 3-
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அர்செனல் கிளப் நேற்று அவர் வெற்றியை பெற்றது.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் கிளப் புல்ஹாமை சந்தித்து விளையாடியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் 3-0 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் கிளப்பை வீழ்த்தி வெற்றி பெற்றது
அர்செனல் வெற்றி கோல்களை விக்டர் கோயோகிரஸ், புகாயோ சகா ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் 76 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

