மெட்ரிகுலேஷனில் 2,500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள்!சுரேன் கந்தா வேண்டுகோள்

பூச்சோங், மே 3-
மெட்ரிக்குலேசனில் 2,500 இந்திய மாணவர்கள் கல்வி பயில அரசாங்கம் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சுரேன் கந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்ற மாணவர்கள் இயல்பாகவே மெட்ரிகுலேஷன் பயில வாய்ப்பு கிடைத்தது விடும்.

அதேசமயம் 9ஏ,8ஏ, 7ஏ பெற்ற மாணவர்களும் மெட்ரிகுலேஷன் பயில வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

மெட்ரிகுலேஷனில் 2,500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால போராட்டமாகும்.

இது நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஆகவே அரசாங்கம் கண்டிப்பாக 2,500 இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷனில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கல்வி அமைச்சர் பாட்லினா சீடேக் இன்று பூச்சோங் காசல்பீல்ட் தமிழ்ப் பள்ளியில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் கல்வி யுத்தத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சுரேன் கந்தா இந்த கோரிக்கையை முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles