
மஇகா தேசியத் தலைவருக்கான தேர்தல் ஏப்ரல் 12இல் நடைபெறும் வேளையில் மேல்மட்ட தலைவர்கள் மஇகாவின் தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டோம் என்று மஇகாவின் துணைத் தலைவரும் தலைவர் பதவி தேர்தல் குழு தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
துன் சாமிவேலுக்கு பின் கட்சிக்கு அதிக சொத்துகளை சேர்த்தவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தான்.
அவரின் தலைமைத்துவத்தை கட்சியின் அனைத்து தரப்பும் முழுமையாக ஆதரிக்கிறது. அதன் அடிப்படையில் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டோம் என நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர் கட்டத்தில் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.