
கோலாலம்பூர் மார்ச் 18-
மித்ரா மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் எடுக்கும் முடிவுகள் இறுதியானதாக இருக்க வேண்டும் மியாபோர்ஸ் இயக்கத்தின் தலைவர் தயாளன் ஶ்ரீபாலன் கூறினார்.
மித்ராவுக்கு ஆலோசனை நிறுவனம் நியமிக்கப்படுவதும் அதற்கு 5 லட்சம் வெள்ளிக் கட்டணம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? மேலும் மித்ராவின் சிறப்பு பணிக் குழு தலைவராக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் நியமிக்கப்பட்டார்.
அவருக்கும் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ கடிதமும் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் முன் திரண்டு பிரதமருக்கு மகஜர் கொடுக்க இங்கு வந்தோம்.
இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு உரிய தீர்வை வழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. பிரதமரின் அதிகாரிகளின் ஒருவரான சண்முகத்திடம் மகஜர் இன்று காலையில் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் சொன்னார். டிரா மலேசிய தலைவர் சரவணன் சின்னப்பன் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

