

சிரம்பான் மார்ச் 18-
நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தின் வீடமைப்பு கொள்கைக்கு ஏற்ப
Taman Senawang Perdana
(Fasa 2) 80 ஆயிரம் வெள்ளி விலையில் வாங்கக்கூடிய சக்திக்கு ஏற்ப அழகான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இந்த வீடுகளை பெறுவதில் 76 பேர் குலுக்கல் மூலம் வெற்றி பெற்றுள்ளனர்.
10 ஏக்கருக்கு மேல் உள்ள ஒவ்வொரு திட்டமும் நெகிரி செம்பிலானின் வீட்டுக் கொள்கையின் அடிப்படையில் 20% RM 80 ஆயிரம் விலையில் ஒரு வகை A வீட்டைக் கட்ட வேண்டும் அந்த வகையில் இங்கு கட்டப்பட்டுள்ளது வீடுகள் குடியிருப்பதற்கு வசதியாக உள்ளது.
நேற்று நடைபெற்ற வீடுகளுக்கான குலுக்கல் நிகழ்வில் நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண், நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜெ அருள் குமார், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

