உலுபெர்ணம் ஸ்ரீ மகா முனியாண்டி ஆலய வருடாந்திர திருவிழா!!

உலுபெர்ணம்,மார்ச்19: உலுபெர்ணம் பிரிவு 2இல் அமைந்திருக்கும் ஸ்ரீ மகா முனியாண்டி ஆலயத்தின் வருடாந்திர திருவிழா வருகின்ற 31.03.2024,ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருப்பதாக திருவிழா ஏற்பாடு குழுவினர் தெரிவித்தனர்.

அன்றைய தினம் காலை 7.30 மணியளவில் நித்திய பூஜையோடு , தீபாராதணை மற்றும் மஹா அபிஷேகம் நடைப்பெறும். அதனைத் தொடர்ந்து அலங்காரம் ‌நடைப்பெறும். மேலும், மதியம் 12.20 அளவில்‌ மகேஸ்வர பூஜையோடு அர்ச்சனையும், அன்னதானமும் நடைபெறும் என்றனர்.

மேலும்,தோட்டத்தின் முன் முன்னாள் குடியிருப்பாளர்களும் உலுபெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர்களும் திராளாக கலந்து ஸ்ரீ மகா முனியாண்டியின் அருளாட்சியை பெற்று நலம் சூழ்ந்து வாழ வரவேற்பதாக ஏற்பாடு குழுவினர் நெஞ்சார அழைக்கின்றனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles