
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் ரூ.4 கோடி பிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளது.
அதற்கு பதிலளித்த அவர், நெல்லை பாஜக வேட்பாளரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் பதிலளித்திருக்கிறார்.
ஒரு சதி வலையில் நயினார் நாகேந்திரனின் பெயர் சொல்லப்பட்டிருக்கிறது. ‘எனக்கும், அந்தப் பணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்று நயினார் நாகேந்திரன் சொல்லிய பிறகு, அதற்குமேல் அது குறித்து பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்தார்.

