
கடந்த பிப்ரவரி மாதம் செத்தியா ஆலமில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 23 ஆவது மாடியிலிருந்து தனது தாய்லாந்து காதலியைத் தள்ளி கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட லாரி ஓட்டுநர் நாதன் மீதான வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடத்த ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தேதியை நிர்ணயித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி இரவு 10.02 மணிக்கு ஜாலான் செத்தியா டாகாங் ஏ.எச். யு13/ஏ.எச். செத்தியா ஆலமில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் 32 வயதான மாவிகா லும்மை என்றப் பெண்ணை கொலை செய்ததாக நாதன் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை வழங்கவும் மரண தண்டனை வழங்காத பட்சத்தில் 40 ஆண்டுகள் வரையிலான சிறை மற்றும் 12 பிரம்படி வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302 பிரிவின் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
-பெர்னாமா

