
மா. பவளச்செல்வன்
கோலகுபு பாரு ஏப்ரல் 9-
கோல குபு பாரு தொகுதியில் யார் போட்டியிட்டாலும் பக்கத்தான் ஹராப்பான் வரவேற்கிறது.
சில இந்தியத் தலைவர்கள் பெரிக்கத்தான் நேஷனலுடன் குறிப்பாகப் பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பை காணலாம்.
அவர்களுக்கு நான் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். கோல குபு பாரு தொகுதியைக் கைப்பற்றலாம் என கனவு காணாதீர்கள் என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.
மறைந்த சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங்கின் சாதனைகள் இத்தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவுகோலாக விளங்கும்
சிலாங்கூர் மாநில அரசின் அளப்பரிய சேவைகள் பக்கத்தான் ஹராப்பான் இந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தும் எனத் தாம் நம்புவதாகவும் டாக்டர் சத்திய பிரகாஷ் குறிப்பிட்டார்.

