
கோலாலம்பூர், ஆகஸ்ட் 11 – சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து வொங் ஜென் விலகினார்.
அவரது பதவி விலகல் அமலுக்கு வந்தது.
மூன்று தவணைகள் நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் சேவையாற்றி வந்த வொங் ஜென் , தமது பதவி விலகல் கடிதத்தை, இம்மாதம் ஆகஸ்ட் 5- ஆம் தேதி மக்களவைத் தலைவர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துலிடம் சமர்பித்து விட்டதை உறுதிப்படுத்தினார்.
நாடாளுமன்ற நிர்வாகம் தேவையான தயார் நடவடிக்கைகளை எடுப்பதற்கான கால அவகாசத்தை வழங்குவதற்காக , தாம் முன்கூட்டியே அந்த பதவி விலகல் கடிதத்தை சமர்பித்ததாக, வொங் ஜென் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
கூட்டரசு அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டு , பதவி விலகும் முடிவு சுயமாக எடுக்கப்பட்டது என குறிப்பிட்டு, வொங் ஜென் , தமது பதவி விலகல் கடிதத்தின் நகலையும் பகிர்ந்துக் கொண்டார்.

