
கோலாலம்பூர், ஆக 11-
MADANI Malaysia அரசாங்கம் மலேசிய இந்திய சமூகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இந்திய சமூக மாற்றப் பிரிவு (MITRA) மூலம் இன்று 67 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டு, Tuition MADANI, Uyarvu MADANI மற்றும் Dharma MADANI ஆகிய மூன்று முக்கிய திட்டங்களுக்கு வழங்கப்பட்டது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், தொழில் முனைவோர் மற்றும் இந்து வழிபாட்டுத் தலங்கள் பயனடையும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.
Tuition MADANI 2026 மூலம்
28 பயிற்சி மையங்கள் ஏழு மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் SPM மற்றும் STPM மாணவர்கள் 2,343 பேர் பயனடைவார்கள்.
இதற்காக 26 லட்சத்து 30,000 லட்சம் வெள்ளி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் டிசம்பர் 2026 வரை ஐந்து மாதங்களுக்கு இலவசமாக கட்டமைக்கப்பட்ட கூடுதல் வகுப்புகள் நடத்தப்படும்.
இதன் நோக்கங்கள்!
மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்துதல்
- கல்வியில் ஏற்படும் இடைவெளியைக் குறைத்தல்
- குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைத்தல் ஆகும்.
Uyarvu MADANI மூலம் இந்திய தொழில் முனைவோர் உதவிகள்
Geran Usahawan India B40/M40 (Uyarvu MADANI) திட்டத்தின் கீழ் 128 தொழில்முனைவோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்காக 3.05 மில்லியனுக்கும் அதிகமான மானியம் வழங்கப்படுகிறது.
இந்த உதவி:
- தொழில் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க
- போட்டித் திறனை வலுப்படுத்த
- சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கு உதவ பயன்படுத்தப்படும். Dharma MADANI
திட்டத்தின் கீழ் 52 இந்து ஆலயங்களுக்கு பத்து லட்சத்து 40,000 வெள்ளி நிதி வழங்கப்படுகிறது.
இதுவரை, நாடு முழுவதும் 676 இந்து ஆலயங்களுக்கு மொத்தம் 1 கோடியே 35 லட்சத்து 20,000 வெள்ளி நிதியை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த உதவியின் மூலம்:
மாணவர்களுக்கான கலாசார வகுப்புகள்
- சமூக மையங்களை அமைத்தல்
- கல்வி நடவடிக்கைகளுக்கான இடங்கள்
- கலாசார மற்றும் சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான வசதிகள்
ஆகியவை மேம்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.
மேலும் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு முழுமையானதும் நிலையானதுமான அணுகுமுறை அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு நிலையிலும் உள்ள இந்திய சமூகத்திற்கு தரமான கல்வி வாய்ப்புகளைப் பெற அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்முனைவோர் ஆதரவைப் பெற, மற்றும் சமூக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களுக்கு உதவி கிடைப்பதை
MADANI அரசாங்கம் உறுதி செய்கிறது என்றார்.
இந்த மூன்று திட்டங்களும் அரசாங்கம் வெறும் நிதியுதவி வழங்குவதுடன் நிற்காமல், மனித மூலதனம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலனில் நீண்டகால முதலீடு செய்கிறது என்பதை நிரூபிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Tuition MADANI, Uyarvu MADANI மற்றும் Dharma MADANI ஆகிய திட்டங்கள், கல்வி மேம்பாடு, பொருளாதார வலுவூட்டல் மற்றும் சமூக நிறுவனங்களை வலுப்படுத்துதல் மூலம் மேலும் உள்ளடக்கிய, போட்டித்திறன் மிக்க மற்றும் நலமான இந்திய சமூகத்தை உருவாக்கும் Malaysia MADANI கொள்கையின் நோக்கத்துடன் இணைந்துள்ளன என்று அவர் சொன்னார்.

