கல்வி ஒன்றே சமூக உருமாற்றத்தின் மூலதனம் – டாக்டர் சிவகுமார்!!

பத்து காஜா,ஆக11: எந்தச் சூழலிலும் மாணவர்கள் கல்வியை தொடர்வதிலிருந்து பின்வாங்க கூடாது.மாணவர் சமூகத்தின் வெற்றியும் முன்னேற்றத்திற்கும் கல்வி மட்டுமே மூலதனம் என்றும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் வ.சிவகுமார் தெரிவித்தார்.

மாணவர் சமூகம் மட்டுமின்றி ஒரு நாட்டின் சமூகத்தின் உருமாற்றத்திற்கே கல்வி தான் மூலதனம் என்பதையும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் சிவகுமார் இதனை நினைவுறுத்தினார்.

பத்துகாஜா,சுல்தான் யூசோப் இடைநிலைப்பள்ளிக்கு 2 நவீன விவேகத் தொடுத்திரை (ஸ்மார்ட் போர்ட்) அன்பளிப்பாக வழங்கிய பின்னர் சிவகுமார் இதனைத் தெரிவித்தார்.

இப்பள்ளியின் கல்வி வளர்ச்சி,மேம்பாடு உட்பட கல்வி செயல்பாடுகள் குறித்தும் பள்ளி முதல்வரிடம் கேட்டறிந்த மாண்புமிகு சிவகுமார் இப்பள்ளியின் தொடர் முயற்சிகளுக்கும் செயல்பாடுகளுக்கும் தாம் எப்பவும் துணை நிற்பேன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார்.

இன்றைய நவீன உலகில் கல்வியில் மேற்கொள்ளப்படும் நவீன திட்டங்களுக்கு ஒப்ப ஒவ்வொரு பள்ளிக்கூடமும் நவீன சிந்தனையும் புத்தாக்க மேம்படுத்துதலும் அவசியம் என்றும் விவரித்தார்.

அதே வேளையில், பத்துகாஜா நாடாளுமன்ற த்திற்கு உட்பட அனைத்து ஆரம்பப்பள்ளி,இடைநிலைப்பள்ளிகளின் கல்வி உட்பட அதன் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து பத்துகாஜா நாடாளுமன்ற சேவை மையம் அதன் ஆக்கப்பூர்வ பங்களிப்பை செய்யும் என்றும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles