
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 10-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றிரவோடு முடிவடையும் வேளையில் ம இகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி மோகன் தீவிர பிரச்சாரத்தில் இறங்கினார்.
கோலகுபு பாரு, கெர்லிங், ராசா, பத்தாங் காலி இடங்களில் இந்திய வாக்காளர்கள் மத்தியில் அவர் ஆதரவு திரட்டினார்.
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவை ஆதரித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

