கெர்லிங் தோட்டத்தில்வீராசாமியை நலம் விசாரித்தார் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலகுபு பாரு மே –
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்றிவோடு முடிவடைந்தது.

இந்நிலையில் பெரிக்கத்தான் நேஷனல் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஜைனுடின் நேற்று மாலையில் கெர்லிங் தோட்டத்திற்கு வருகை புரிந்தார்.

அப்போது ஒரு வீட்டிற்கு வருகை புரிந்த அவர் படுக்கையில் இருந்த வீராசாமியை நலம் விசாரித்தார்.

கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் உள்ள இந்தியர்கள் மாற்றத்தை விரும்பி பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

பெரிக்கத்தான் நேஷனல் பிரச்சாரத்தில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி தலைவர் புனிதன், துணை தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles