
மீம்ஸ் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ‘கபோசு’ நாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. கபோசுவின் மறைவுக்கு உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் தங்களுடடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
உலகம் முழுவதும் மீம்ஸ் மூலம் பிரபலமான விஷயங்களில் கபோசு (Kabosu) நாயும் ஒன்று. அந்த அளவுக்கு பல ரியாக்சன்களை கொடுத்து நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
இந்நிலையில் கபோசு நாய் நேற்று உடல் நலக் குறைவால் உயிரிழந்தது. 18 வயதான கபோசு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
உலகத்தில் அதிக அன்பை பெற்றுக்கொண்ட நாய் என்றால் அது கபோசு தான்.

