
லண்டன் மே 26-
பரபரப்பான எஃப்.ஏ. கிண்ணக் கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் 2-1 என்ற கோல் கணக்கில் பரம எதிரியான மென்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது.
முதல் பாதி ஆட்டத்தில் 30,39 ஆவது நிமிடத்தில் இரு கோல்களை அடித்து மென்செஸ்டர் யுனைடெட் கலக்கியது.
பிற்பகுதியில் 87 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் சிட்டி ஒரு கோலை போட்டது.
இறுதியில் மென்செஸ்டர் யுனைடெட் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கடந்த வாரம் இங்கிலீஷ் பிரீமியர் லீக் பட்டத்தை வென்ற மென்செஸ்டர் சிட்டி கிளப் எஃப் ஏ கிண்ணப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

