
கோலாலம்பூர் மே 29-
மாராஸ் ரவி நிறுவனத்தின் ஏற்பாட்டில் வரும் ஜூன் மாதம் 29 ஆம் தேதி ஷா ஆலம் ஐடிசிசி மாநாட்டு மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறத
மலேசியாவில் இருந்து 29 கலைஞர்களும் தமிழ் நாட்டில் இருந்து 29 கலைஞர்களும் இந்த கலை விழாவில் பங்கேற்கிறார்கள் என்று மாராஸ் ரவி தெரிவித்தார்.
ஜூன் 29 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு தொடங்கும் இந்த தமிழ் இசை மழை நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடைகிறது.
எட்டு மணி நேரம் நடைபெறும் இந்த இன்னிசை விழாவில் உள்ளூர் மற்றும் தமிழக கலைஞர்கள் விறுவிறுப்பான பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்விப்பார்கள் என்றார்.
ரசிகர்கள் மத்தியில் டிக்கெட் விற்பனை அமோக வரவேற்பை பெற்றுள்ளது
மலேசிய இசை கலைஞர்கள் இன்னிசையில் இந்த தமிழ் இசை மழை புதிய சாதனை படைக்கும் என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

