ராட்சத பலூன் மூலம் தென்கொரியாவில் குப்பை கொட்டி அச்சுறுத்தும் வடகொரியா

சியோல்: கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. தற்போது ஏராளமான ராட்சத பலூன்களை அனுப்பி வைத்துள்ளது.

அதிலும் 2 பலூன்களை ஒன்றாக இணைத்து அதில் குப்பைகளை கட்டி அனுப்பி வைத்துள்ளது. இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ள தென்கொரியா பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளது.
அந்த பலூன்கள் சுமந்து வந்த பையில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், பேட்டரிகள், ஷூ பகுதிகள், சாணம் இருந்துள்ளது.

அந்த பொருட்கள் வீடுகள், விமான நிலையங்கள் மற்றும் சாலைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம் எனவும் ரசாயன ஆயுதங்களோ வெடி பொருட்களோ இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles