
அமெரிக்க அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட முதல் முன்னாள் அமெரிக்க அதிபர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப்.
வியாழன் அன்று மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் டிரம்பை குற்றவாளியாக அறிவிக்க காரணமான 34 குற்றங்களில், சிறைத்தண்டனைக்கான வாய்ப்புகள் குறைவு என்பதை பெரும்பாலான நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால் ஒருவேளை நிலைமை மோசமானால், அதாவது அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், டிரம்ப் அதிபர் வேட்பாளராக நீடிக்க முடியுமா?
என்பதுடன், அமெரிக்க அதிபர் தேர்தலிலும் சிறையில் இருந்தவாறே போட்டியிடவும் முடியுமா? என்ற விவாதம் எழுந்துள்ளது.

