வெற்றியை கொண்டாட ஆவலுடன் காத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!!

சென்னை : இண்டியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட ஆவலுடன் காத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

. தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, இன்று (ஜூன் 3) சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதேபோல் கலைஞரின் 101வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் அவர் புகைப்படத்திற்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா.உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles